Advertisment

இசுலாமிய பெண்களின் வழக்கறிஞராக செயல்படும் மோடி- பிரவீன் தொகாட்டியா

togadia

Advertisment

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மக்களவையில் முத்தலாக் தடை சட்டம் மசோதா நிறைவேற்றப்பட்டது. தற்போது அதற்கு அவசரச்சட்டம் கொண்டுவந்துள்ளது மத்திய அரசு. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவையில், முத்தலாக் தடை சட்டத்திற்கு அவசரச்சட்டம் கொண்டுவர ஒப்புதல். முத்தலாக் தடை சட்டத்தில் போதிய திருத்தங்கள் செய்து அவசரச்சட்டமாக வெளியிட ஒப்புதல் வழங்கப்பட்டது.

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரவீன் தொகாட்டியா இப்போது அந்தரஷ்ட்ரியா இந்து பரிஷத் என்னும் புதிய அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார். இவர் முத்தலாக் விவகராம் குறித்து கூறுகையில், ”நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும், கல்வி எளிமையாக அனைவருக்கும் கிடைக்க வேண்டும், கோடிக்கணக்கான இளைஞர்களுக்கும் வேலை கிடைக்கும், பெட்ரோல் விலை குறையும், விவசாயிகள் தங்கள் கடன்களை திருப்பி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். ஆனால் மோடி அரசு அதனையெல்லாம் தவிடு பொடியாக்கிவிட்டது” என்றார். பின்னர், முத்தலாக் மசோதாவுக்கு அவசரச்சட்டம் இயற்றி இசுலாமிய பெண்களுக்கு வழக்கறிஞராக செயல்படுகிறார்.

modi muthalak. praveen togadia
இதையும் படியுங்கள்
Subscribe