அதிவேக இணைய வசதியை வழங்கவுள்ள 5ஜி தொழில்நுட்பம், இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் டெல்லி பிரகதி மைதானத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி 5ஜி தொழில்நுட்பத்தை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
முதலில் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5 ஜி அமலுக்கு வர இருக்கிறது. இரண்டு ஆண்டு காலத்திற்கு பின் 5 ஜி நாடு முழுவதும் அமலுக்கு வர இருக்கிறது. இன்று பிரகதி மைதானத்திற்கு வந்து அங்குள்ள அரங்குகளை பார்வையிட்ட மோடி, 5ஜி சேவையைதுவங்கி வைத்ததோடு, மொபைல் காங்கிரஸின் 6 வது பதிப்பையும் தொடங்கி வைத்தார்.