கேரளாவில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி இன்று காலை கொச்சி வந்தடைந்தார். பின்னர், மோடியும் பினராயி விஜயனும் ஆலோசனை கூட்டம் மேற்கொண்டனர். அதில் முதல் கட்ட நிதியாக கேரளாவுக்கு 500 கோடி வழங்குவதாக அறிவித்தார் மோடி.
இதனை அறிவித்த பின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு வருகிறார். முதலில் கனமழை காரணமாக ரத்து செய்யப்படும் என்று சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.