modi

கரோனாதடுப்பூசிகளுக்கு, ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில்,வருகின்ற16 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசிசெலுத்தும் பணி தொடங்கும்எனமத்திய அரசு அறிவித்துள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்துவதில், கரோனாமுன்களப் பணியாளர்களுக்கும், 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்டக் குழு, கரோனாதடுப்பூசி செலுத்தமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தயார்நிலையை ஆராய்ந்தபிறகு, தடுப்பூசி செலுத்தும் பணிக்கானதேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில்,இதுகுறித்து பேசியுள்ள பிரதமர் மோடி, "ஜனவரி 16 ஆம் தேதி, கரோனாவை எதிர்த்துப் போராடுவதில் இந்தியா ஒரு முக்கியப் படியைஎடுத்து வைக்கிறது. அந்த நாளில் இந்தியாவின் நாடுதழுவிய தடுப்பூசி(செலுத்தும்) இயக்கம் தொடங்குகிறது. நமது துணிச்சலான மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள்உள்ளிட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்" என்றார்.

Advertisment