சொத்து விவர அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
மக்களின் நில விவரங்கள் மொத்தத்தையும் ஒரே அட்டையில் கொண்டுவரும் விதத்திலான சொத்து விவர அட்டை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒருவரின் பெயரில் உள்ள மொத்த சொத்துகள் குறித்த விவரங்களும் ஒரே அட்டையில் இடம்பெறும் வகையில் இந்த புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. கிராம மக்கள் தங்கள் சொத்துகளைக் காண்பித்து கடனுதவி, நிதிச் சலுகை ஆகியவை பெறுவற்கு இந்த திட்டம் உதவிகரமாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக இந்த திட்டம், உத்தரப் பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 763 கிராம மக்கள் இந்தச் சொத்து விவர அட்டையைப் பெறவுள்ளனர்.