Advertisment

மனதின் குரல் நிகழ்ச்சியின் போது ராஜஸ்தானில் நடந்த ருசிகர சம்பவம்

modi hundredth episode maanki baat rajathan marriage incident 

பிரதமர் நரேந்திர மோடியின் மன் கி பாத்என்ற மனதின் குரல் நிகழ்ச்சியின் 100வது பகுதி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பானது. இந்த 100வது சிறப்புப் பகுதியைபொதுமக்கள் அனைவரும் கேட்பதற்காக மத்திய அரசும் பாஜகவும் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்திருந்தன.

Advertisment

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா நகரில் ரிஷப் பேர்வால் என்பவருக்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. அப்போது தனது திருமணத்துக்கு நடுவே காலை 11 மணியளவில் பிரதமர் மோடியின் 100வது மனதின் குரல் நிகழ்ச்சி அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பானதை அடுத்து மணமகன் ரிஷப் பேர்வால் தனது திருமண நிகழ்ச்சியைச் சிறிது நேரம் ஒத்தி வைத்தார். பின்னர் அவரது வேண்டுகோளுக்கு இணங்க திருமண மண்டபத்திலிருந்து எல்இடி திரையில் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேலும் மோடியின் உரையைக் கேட்கும்படி திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களை ரிஷப் கேட்டுக்கொண்டார். மோடியின் உரை முடிந்த பிறகு மீண்டும் திருமண நிகழ்ச்சிகள் தொடர்ந்தன.

Advertisment

இதுகுறித்து மணமகன் ரிஷப், “பிரதமர் மோடியின் வழிகாட்டுதல்கள் எனக்கு எப்போதும் உத்வேகத்தை அளிக்கும். மனதின் குரல் நிகழ்ச்சியின் ஒரு பகுதியைக் கூட தவற விடாமல் தொடர்ந்து கேட்டு வருகிறேன். இந்த நிகழ்ச்சி மூலம் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். எனவே பிரதமர் மோடியின் 100வது நிகழ்ச்சியையும் தவறவிடக்கூடாது என நினைத்து எனது திருமணத்தைச் சிறிது நேரம் நிறுத்தி விட்டு பிரதமரின் உரையைக் கேட்டேன். என்னுடன் எனது மனைவி மற்றும் உறவினர்கள் என அனைவரும் இந்நிகழ்ச்சியைக் கேட்டனர்” என்று கூறினார்.

marriage Rajasthan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe