ADVERTISEMENT

பிரதமர் மோடி, சுந்தர் பிச்சை திடீர் ஆலோசனை...

02:20 PM Jul 13, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரதமர் மோடி, ஆல்ஃபபெட் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையுடன் இன்று காணொளிக்காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டார்.

இருவருக்கும் இடையேயான இந்தச் சந்திப்பில், வேலை சூழலில் கரோனா தொற்று ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள், மற்றும் தகவல் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில், "இன்று காலை, சுந்தர் பிச்சையுடன் மிகவும் பயனுள்ள ஆலோசனை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. நாங்கள் பரந்த அளவிலான நிறைய விஷயங்கள் குறித்துப் பேசினோம், குறிப்பாக இந்தியாவின் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரின் வாழ்க்கையை மாற்ற தொழில்நுட்பத்தின் ஆற்றலை மேம்படுத்துவது குறித்துப் பேசப்பட்டது. கல்வி, கற்றல், டிஜிட்டல் இந்தியா, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை போன்ற பல துறைகளில் கூகுள் நிறுவனத்தின் புதிய முயற்சிகளைப் பற்றி மேலும் அறிந்து கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT