"இது ஒரு தேசத்துரோகம்... மோடி அரசு தேசத்துரோகம் செய்துள்ளது" - ராகுல் காந்தி விமர்சனம்!

rahul gandhi

இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரம் தொடர்பாக பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகள் விசாரணையில் இறங்கியுள்ளன.

இதற்கிடையே பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்க ஓய்வுபெற்றஉச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, 8 வாரங்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில்பிரபல அமெரிக்க ஊடகமானநியூயார்க் டைம்ஸ், பெகாசஸைஉலக நாடுகள் வாங்கியது குறித்தும், அந்தநாடுகள்அவற்றை எப்படி பயன்படுத்தியதுஎன்பது குறித்து விரிவான புலனாய்வு கட்டுரையைவெளியிட்டுள்ளது. அக்கட்டுரையில், 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியா கடந்த 2017 ஆம் ஆண்டு பெகாசஸ் மென்பொருளைவாங்கியதாக கூறியுள்ளது. இது இந்திய அரசியல் வட்டாரங்களில் மீண்டும் புயலை கிளப்பியுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பெகாசஸைபயன்படுத்தியதன் மூலம் மோடி அரசு தேசத்துரோகம் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நமது முதன்மை ஜனநாயக நிறுவனங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களை உளவு பார்ப்பதற்காக மோடி அரசு பெகாசஸைவாங்கியுள்ளது. அரசாங்க அதிகாரிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பாதுகாப்பு படைகள், நீதித்துறை என அனைவரும் இந்த தொலைபேசி ஒட்டுக்கேட்பால் குறிவைக்கப்பட்டுள்ளனர். இது ஒரு தேசத்துரோகம். மோடி அரசு தேசத்துரோகம் செய்துள்ளது" என கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்
Subscribe