cfgn

Advertisment

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணத்துக்காக மத்திய அரசு செலவு செய்த தொகை குறித்து காங்கிரஸ் எம்.பி. சஞ்ச் சிங் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் நேற்று எழுத்து பூர்வமாக மாநிலங்களவையில் பதில் அளித்தார். அதில் அவர், ' கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து 92நாடுகளுக்கு பிரதமர் மோடிபயணித்துள்ளார், இந்த பயணத்துக்காக மத்திய அரசு ரூ.2021 கோடி செலவு செய்துள்ளது. பிரதமர் மோடியின் தனிப்பட்ட விமானத்துக்காக ரூ.429.25 கோடியும், விமானத்தின் பராமரிப்புச் செலவுக்கு ரூ.1,583.18 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. ஹாட்லைனுக்காக ரூ. 9.11 கோடி செலவிடப்பட்டுள்ளது.மன்மோகன் சிங் 38 நாடுகளுக்கு அவரது ஆட்சிக்காலத்தில் பயணித்துள்ளார். அவரின் தனிப்பட்ட விமானச் செலவு ரூ.493.22 கோடி, விமானப் பராமரிப்புச் செலவுக்காக ரூ.842.6 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும் மோடியின் இந்த பயணங்கள் மூலம் கடந்த 2014 வரை 3,093 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்த அன்னிய முதலீடு 2017-ம் ஆண்டு 4,347 கோடி டாலர்களாக அதிகரித்துள்ளது' என கூறியுள்ளார்.