Skip to main content

“மோடி ஒரு முட்டாள்... துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அவரா சென்றார்”- சித்தராமையா

Published on 20/04/2019 | Edited on 20/04/2019

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதில் இரண்டு கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. ஆட்சியில் இருக்கும் பாஜக ஆட்சியை தக்க வைக்க பிரச்சாரங்கள் வலுவாக மேற்கொண்டு வருகின்றனர்.
 

sidharamaiya

 

 

சில இடங்களில் பாஜக முதன்மை படுத்தி சொல்வது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பற்றிதான். பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதிகளுக்கு கொடுத்த பதிலடி தாக்குதலை வைத்து பாஜக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
 

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சித்தராமையா, “மோடி ஒரு முட்டாள். அரசியல் ஆதாயத்திற்காக சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை கையில் எடுத்து பயன்படுத்துகிறார் அது மிகவும் தவறானது. இந்திய ராணுவப்படைதான் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை நடத்தியது. துப்பாக்கியை எடுத்துக்கொண்டு மோடியா சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தினார். பின்னர், ஏன் மோடி இதை கூறி புகழ் தேடிக்கொள்கிறார்” என்று சர்ச்சையாக பேசியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மணிப்பூர் விவகாரம்; கலவரத்தை ஒடுக்க சர்ஜிக்கல் ஸ்டிரைக் நிபுணர் நியமனம்

Published on 04/09/2023 | Edited on 04/09/2023

 

Appointment of surgical strike specialist to quell riots in manipur

 

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரங் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால், பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகினார்கள். மேலும், 60,000க்கும்  மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.

 

இதற்கிடையில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுவதிருந்தது.

 

இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் மூத்த காவல்துறை கண்காணிப்பாளராக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் நெக்டர் சஞ்சன்பாம் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மணிப்பூர் உள்துறை இணைச் செயலர் விடுத்துள்ள அறிக்கையில், “மிகவும் சவாலான சூழ்நிலையில் துல்லியமான திட்டமிடல், முன்மாதிரியான துணிச்சல், தைரியமான நடவடிக்கையை மேற்கொண்ட ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் நெக்டர் சஞ்சன்பாம் மூத்த காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகள் அவர் இந்த பதவியில் இருப்பார்” எனக் கூறப்பட்டுள்ளது. 

 

கர்னல் சஞ்சன்பாம், கடந்த 2015 ஆம் ஆண்டு மியான்மரில் இந்தியா நடத்திய ராணுவப் படையின் மிகவும் துல்லிய தாக்குதல் எனப்படும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை வழி நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

முதல்வரைத் தட்டிக் கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர்; கர்நாடகாவில் சுவாரஸ்யம்

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

sitharamaiya basavaraj bommai meets karnataka bellavi airport

 

கர்நாடகாவில் அடுத்த மாதம் 10 ஆம் தேதி (10.05.2023) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தற்போது அங்கு ஆட்சியிலிருக்கும் பாஜகவும், எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸும் தேர்தலுக்கான பரப்புரையைத் தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

 

கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

 

அரசியல் கொள்கை ரீதியாக பாஜகவினரும் காங்கிரஸ் கட்சியினரும் தேர்தல் களத்தில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாஜகவை சேர்ந்த கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும்  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா ஆகிய இருவரும் தீவிரமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று பெலகாவி விமான நிலையத்தில்,  பசவராஜ் பொம்மையும் சித்தராமையாவும் ஒருவருக்கு ஒருவர் எதிரெதிரே நேரடியாக சந்தித்து கொண்டனர். அப்போது இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர். மேலும் சித்தராமையா பசவராஜ் பொம்மையை தோளில் தட்டிக் கொடுத்தார். பிறகு இருவரும் ஒரு சில நொடிகள் பேசியபடி விமான நிலையத்தில் நடந்து சென்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.