Modi flew in a fighter jet

பிரதமர் மோடி போர் விமானத்தில் பயணித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

இந்திய போர் படையில் இருக்கும் தேஜஸ் எனும் போர் விமானத்தில் பிரதமர் மோடி பயணித்தார். விமான போர் படையின் சீருடை அணிந்தபடி ஜெட்டில் ஏறிய பிரதமர் மோடி, கையசைத்தபடி உற்சாகமாக பயணம் செய்யும் இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

இந்த பயணம் குறித்து எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''தேஜஸ் விமானத்தில் ஒரு பயணம் வெற்றிகரமாக முடிந்தது. இந்த அனுபவம் நம்பமுடியாத அளவிற்கு செழுமைப்படுத்தியது.நமது நாட்டின் பூர்வீக திறன்கள் மீதான எனது நம்பிக்கையை கணிசமாக உயர்த்தியது. மேலும் நமது தேசிய திறனைப் பற்றிய புதிய பெருமை மற்றும் நம்பிக்கையை எனக்கு அளித்தது' என தெரிவித்துள்ளார்.

Advertisment