உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவில் இன்று பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகளையும், அவர்களின் வாக்கு வாங்கி அரசியல் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

Advertisment

modi election campaign for loksabha election

அவர் பொதுமக்களிடையே பேசுகையில், "இந்த கட்சிகளின் பயங்கரவாதம் மீதான மென்மையான அணுகுமுறையை ஆதரிக்கின்றன. அவர்களின் இந்த அணுகுமுறை பயங்கரவாதிகளுக்கு உதவி செய்வதாக உள்ளது மட்டுமின்றி, மக்களின் பாதுகாப்பையும் சமரசம் செய்வதாக உள்ளது. வாக்கு வங்கி அரசியலுக்காக மட்டுமே மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பயங்கரவாதிகளை சுதந்திரமாக செயல்பட விட்டனர். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக நாட்டில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது. ஏதாவது தவறாக செய்தோம் என்றால் மோடி நமக்கு சரியான பாடம் கற்பிப்பார் என பயங்கரவாதிகளுக்கு தெரியும். எங்கு சென்று ஒளிந்தாலும் தப்பிக்க முடியாது என பயங்கரவாதிகளுக்கு நன்கு தெரியும்" என்றார்.