Advertisment

இந்தியாவை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்தும் மோடி அரசு - மனித உரிமை அமைப்பு அதிர்ச்சி அறிக்கை!

pm modi

அமெரிக்காவைச் சேர்ந்தமனிதஉரிமைகள் அமைப்பு ஃபிரீடம்ஹவுஸ்(freedom house). இந்த அமைப்புக்கு அமெரிக்கஅரசு நிதி உதவி அளித்துவருகிறது. இந்த அமைப்பு 'உலகில் சுதந்திரம் 2021 - முற்றுகையின் கீழ் ஜனநாயகம்' என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்உலக நாடுகளில் உள்ள ஜனநாயகம்குறித்துதெரிவித்துள்ளது.

Advertisment

இந்த அறிக்கையில், ‘2014இல் மோடி பிரதமரானதிலிருந்து இந்தியாவில்அரசியல் உரிமைகள் மற்றும் சட்டப்பூர்வ உரிமைகள்மோசமடைந்துள்ளன’ எனக் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த அறிக்கை,"நரேந்திர மோடி 2014இல் பிரதமரானதிலிருந்து மனித உரிமைகள் அமைப்புகள் மீது அதிகரித்த அழுத்தம், கல்வியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு மிரட்டல் மற்றும் முஸ்லிம்களை இலக்காகக் கொண்டபெரிய அளவிலான தாக்குதல்கள்உள்ளிட்டவையால், நாட்டின் அரசியல் உரிமைகள் மற்றும் சட்டஉரிமைகள் மோசமடைந்துள்ளன" என்றுதெரிவித்துள்ளதோடு, “2019இல் மோடி மீண்டும் பிரதமரானதிலிருந்து, இந்த வீழ்ச்சி வேகமாகியுள்ளது” என்றும்கூறியுள்ளது.

Advertisment

கரோனாஊரடங்கைவிமர்சித்துள்ள அந்த அறிக்கை, "மில்லியன் கணக்கான உள்நாட்டுப் புலம்பெயர்தொழிலாளர்களின் (வெளி மாநில தொழிலாளர்கள்), ஆபத்தான மற்றும் திட்டமிடப்படாத இடம்பெயர்தலுக்கு வழிவகுத்தது" எனத் தெரிவித்துள்ளது. “ஆளும் இந்து தேசியவாத இயக்கம், கரோனா பரவலுக்குக் காரணம் எனகுற்றம்சாட்டப்பட்டு, தாக்குதலுக்கு ஆளான முஸ்லீம்களைப் பலிகொடுப்பதை ஊக்குவித்தது” எனவும்அந்த அறிக்கை கூறியுள்ளது.

மேலும், “ஜனநாயக நடைமுறையில் ஒரு ஆதரவாளராகவும், சீனா போன்ற நாடுகளின் சர்வாதிகார செல்வாக்கிற்கு எதிராகவும் பணியாற்றுவதைவிடுத்து, மோடியும் அவரது கட்சியும் இந்தியாவை சர்வாதிகாரத்தை நோக்கிச் செலுத்துகின்றனர்.மோடியின் கீழ், இந்தியா, ஒரு உலகளாவிய ஜனநாயகத் தலைவராக பணியாற்றுவதற்கான திறனைக் இழந்துள்ளதாகத் தெரிகிறது. குறுகிய இந்து தேசியவாத நலன்களுக்காக, ஒருமைப்பாட்டையும் அனைவருக்குமானசம உரிமைகளையும் இந்தியா இழந்துள்ளது”எனஅந்த அறிக்கை கூறியுள்ளது.

மேலும் இந்த அமைப்பு, “இந்தியாவின் சுதந்திரமான நாடு என்ற அந்தஸ்த்தை மாற்றி, ஓரளவு சுதந்திரமான நாடு என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளது” என்பதுகுறிப்பிடத்தக்கது.

Human Rights India Narendra Modi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe