shiv sena

சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகை சாம்னா. இப்பத்திரிகையில் தொடர்ந்து பிரதமர் மோடியை விமர்சித்தே கட்டுரைகளை எழுதி வருகின்றனர். மோடியை கொல்ல திட்டமிட்டுள்ளதாக சொல்லி ஐந்து இடதுசாரி ஆதரவாளர்களை தற்போது மஹாராஷ்டிரா காவல்துறை கைது செய்திருந்தது. இதையும் சாம்னா பத்திரிகையில் விமர்சித்து எழுதியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை போன்று பிரதமர் மோடியை மாவோயிஸ்டுகள் கொல்ல இருக்கிறார்கள் என்று மஹாராஷ்டிரா காவலர்களுக்கு தகவல் தெரிந்ததாகவும். அதில் தற்போது கைது செய்யப்பட்டிருந்த ஐந்து இடதுசாரி ஆதரவாளர்களுக்கும் தொடர்பு உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

Advertisment

இந்நிலையில்," பிரதமர் மோடி ஒன்றும் இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி போன்று துணிச்சல் மிக்கவர் இல்லை. மாவோயிஸ்டுகளுக்கு பெரும் செல்வாக்கு இருக்கிறது என்று சொல்லும் பாஜகவினர், ஏன் அவர்கள் மேற்கு வங்கம், வடகிழக்கு மாநில தேர்தல்களில் கம்யூனிஸ்டுகள் தோல்விடைய வேண்டும்" என்று சாம்னா பத்திரிகையில் மோடியை விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.