மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/modi-laughing-std_0.jpg)
இந்நிலையில் பிரதமர் மோடி இந்த முறையும் அதே வாரணாசி தொகுதியில் போட்டியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட அவர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அதன் பிறகு தனது பதவி காலத்தில் பல நலத்திட்டங்களை அந்த தொகுதியில் நிறைவேற்றியுள்ளார்.
இந்நிலையில் இந்த தேர்தலிலும் மோடி அதே வாரணாசி தொகுதியில் போட்டியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தனக்கு எதிராக வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட ‘ஆம் ஆத்மி’ தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை 3 லட்சம் வாக்குகளில் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)