Advertisment

வாழ்க்கை என்றால் மேடு பள்ளங்கள் இருக்கத்தான் செய்யும்-விஞ்ஞானிகளுக்கு மோடி ஆறுதல்!

நிலவின் தென்துருவத்தில் இறங்க தயாரான சந்திரயான் -2 வின் விக்ரம் லேண்டர் 2.1 கிலோ மீட்டர் தொலைவில் தகவல் தொடர்பை இழந்தது. 2.1 கிலோ மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டர்இருந்தபொழுது தகவல் தொடர்பை இழந்தது என இஸ்ரோ அறிவித்தது. சற்றுநேர பரபரப்பிற்கு பின்2.1 கிலோ மீட்டர் வரைதான் சிக்னல் கிடைத்ததாக இஸ்ரோ இயக்குனர் சிவன் அறிவித்தார்.

Advertisment

 Modi consolation to scientists

லெண்டரில் இருந்து சிக்னல் கிடைக்காத நிலையில் தைரியமாக இருங்கள் என விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி நம்பிக்கையூட்டினார். இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்டவர்களை தட்டிக்கொடுத்து நம்பிக்கையுடன் இருங்கள் என தேறுதல்கூறினார். வாழ்க்கை என்றால் மேடு பள்ளங்கள் இருக்கத்தான் செய்யும் என விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி நம்பிக்கையுடன் இருங்கள் நாம் சாதித்துள்ளது சிறிய விஷயம் அல்ல என்றார்.

Advertisment

மேலும்லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை பார்வையிட வந்திருந்த மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். மாணவர்களுக்கும் ஆறுதல் மற்றும் அறிவுரை கூறினார். அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

chandrayan 2 ISRO isro sivan shock modi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe