பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெ.பி.நட்டாவை பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

Advertisment

modi congratulates j.p.nadda in person

பாஜக தலைவராக இருந்த அமித்ஷா மத்திய உள்துறை அமைச்சராக பதவியேற்ற நிலையில், கடந்த ஜூன் மாதம் ஜெ.பி. நட்டா செயல் தலைவராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து இன்று பாஜகவின் தலைவராக ஜெ.பி.நட்டா போட்டியின்றி தேர்வானார். இதை டெல்லியில் உள்ள பாஜக தலைமையகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. புதிய தலைவர் ஜெ.பி நட்டாவுக்கு பூங்கோத்து கொடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்தினார். அதேபோல் பல்வேறு மாநில பாஜக தலைவர்களும், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் ஜெ.பி நட்டாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாஜகவின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.பி.நட்டாவுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.