Advertisment

பாகிஸ்தான் விமான விபத்து... மோடி இரங்கல்!

Modi condoles to Pakistan accident

பாகிஸ்தானில் 97பயணிகளுடன் சென்ற எர்பஸ் எ-320 ரக விமானம் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.

Advertisment

கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது குடியிருப்பு பகுதி அருகே விழுந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்துக்குள்ளான விமானம் லாகூரில் இருந்து கராச்சி நோக்கி சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ள நிலையில், விமானத்தில் பயணம் செய்த 97பயணிகள் நிலை என்னவானது என்ற தகவல் இதுவரை முழுமையாக தெரியவில்லை. இதுவரை 2 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன,பல பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விமானம் விழுந்து விபத்துக்குள்ளான பகுதி குடியிருப்பு பகுதி என்பதால் குடியிருப்பில் இருந்தவர்களும் இந்த விபத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Advertisment

இந்நிலையில்பாகிஸ்தான் விமான விபத்து தொடர்பாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.ஒடிசாவில்அம்பன் புயலால்ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டபின் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணமாக தலா 2 லட்சம் வழங்கப்படும்,புயலால் ஏற்பட்ட பாதிப்பில் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 நிவாரணமாக வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

modi accident Pakistan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe