Advertisment

மம்தா பானர்ஜிக்கு மோடியின் பதிலடி; சூடுபிடிக்கும் தேர்தல் களம்...

ijhyujyg

Advertisment

கடந்த சனிக்கிழமை பாஜக எதிர்ப்பு கட்சிகள் அனைத்தும் இணைந்து மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் மாபெரும் பேரணியை நடத்தியது. இதில் பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என மம்தா பானர்ஜி பேசினார். நாடு முழுவதும் உள்ள பல்வேறு கட்சிகள் ஒன்று சேர்ந்து நடத்திய இந்த பேரணி நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் மம்தாவின் செல்வாக்கை குறைக்கும் பொருட்டு பிரதமர் மோடி மேற்கு வங்கம் முழுவதும் பல்வேறு பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள மேற்கு வங்க பாஜக நிர்வாகம், சிலிகுரியில் ஜனவரி 28-ம் தேதி நடைபெறும் பேரணியிலும், ஜனவரி 31-ம் தேதி பொங்கானில் பொதுக்கூட்டத்திலும், பிப்ரவரி 8-ம் தேதி அசான்சோலில் பேரணியிலும் பிரதமர் மோடிகலந்துகொள்கிறார். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஒன்றுதிரண்ட பிரிகேட் பேரேடு மைதானத்தில் அடுத்த மாத முதல் வாரத்தில் மோடி பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

mamta banarji
இதையும் படியுங்கள்
Subscribe