ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்திற்கு பிரதமர் மோடி தமிழில் பிறந்தநாள் வாழ்த்து கூறி அனுப்பிய கடிதம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertisment

modi birthday wish to chidambaram

ப.சிதம்பரத்தின் பிறந்தநாளான செப்டம்பர் 16ஆம் தேதி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார். அதில், “உங்கள் பிறந்தநாள் அன்று என் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்யம் மற்றும் மகிழ்ச்சி தந்து இன்றுபோல் என்றென்றும் மக்களுக்கு சேவை செய்ய உங்களை ஆசிர்வதிக்கட்டும்” என தமிழில் வாழ்த்தியிருந்தார் மோடி.

பிரதமர் மோடி அனுப்பிய இந்த கடிதத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ப.சிதம்பரம், “என் பிறந்தநாளுக்குப் பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தியை பெற்று வியப்பு கலந்த மகிழ்ச்சியடைந்தேன். பிரதமருக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.