Skip to main content

'மோடி இஸ்ரோவில் காலடி வைத்த நேரம்தான் சந்திராயன் திட்டம் தோல்வி' குமாரசாமி குற்றச்சாட்டு!

Published on 13/09/2019 | Edited on 13/09/2019


சந்திராயன்-2 நிலவில் இறங்குவதைக் காண செப்டம்பர் 6-ம் தேதி இரவு பிரதமர் மோடி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு நேரில் சென்றார். இந்தநிலையில் சந்திரயான் 2 பின்னடைவுக்கு பிரதமர் மோடியின் வருகைதான் காரணம் என, நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ''கடந்த 2008-2009-ம் ஆண்டு மத்தியில் ஆட்சி செய்துவந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சந்திராயன் 2 திட்டத்துக்கு அனுமதி கொடுத்து, அதே ஆண்டில் நிதியும் ஒதுக்கியது. தொடர்ந்து 12 வருடங்கள் போராடி விஞ்ஞானிகள் இந்த திட்டத்தை செயல்படுத்தினர். ஆனால் இதற்கு பின்னால் நான் தான் இருக்கிறேன் என்பதைக் காட்டுவதற்காக மோடி இஸ்ரோ மையத்துக்கு நேரில் சென்றார். அவர் இஸ்ரோவில் காலடி எடுத்து வைத்த நேரம் விஞ்ஞானிகளுக்கு துரதிர்ஷ்டவசமாக அமைந்து விட்டது என நினைக்கிறேன்,'' என்று தெரிவித்துள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"நீட் தேர்வை ஒழித்தால்தான் நவீனின் ஆத்மா சாந்தி அடையும்" - குமாரசாமி காட்டம்!

Published on 21/03/2022 | Edited on 21/03/2022

 

கதச

 

இந்தியாவில் இருந்து நீட் தேர்வை என்றைக்கு ஒழிக்கிறோமோ அன்றைக்குத்தான் நவீனின் ஆத்மா சாந்தியடையும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

 

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக உக்ரைனில் அசாதாரண சூழல் நிலவுகிறது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மத்திய அரசு ஆப்ரேஷன் கங்கா மூலம் தயாகம் கொண்டு வந்தனர். அங்கு மருத்துவம் படித்து வந்த இந்திய மாணவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கடும் போராட்டத்துக்கு பிறகு நாடு திரும்பிய நிலையில், கர்நாடக மாணவர் நவீன் கார்கீவ் நகரில் நடைபெற்ற குண்டுவீச்சு தாக்குதலில் பலியானார்.  அவர் கார்கிவ் நகரில் இருந்து வெளியேற ரயில் நிலையம் சென்றபோது இந்தக் குண்டுவீச்சில் சிக்கி பலியானதாக கூறப்படுகிறது. 

 

அவரின் உடலை இந்தியா கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு கூறிவரும் நிலையில், நவீன் தொடர்பாக அம்மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி கருத்து தெரிவித்துள்ளார். அதில், " இந்த நீட் தேர்வு காரணமாக நம்முடைய மாணவர் நவீனை இழந்துள்ளோம். என்றைக்கு இந்தியாவில் இருந்து நீட் தேர்வு ஒழிக்கப்படுகிறதோ அன்றைக்குத்தான் நவீனின் ஆன்மா சாந்தியடையும்" என்று தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

“ஆபாச படம் பாக்க ஆர்.எஸ்.எஸ்-க்கு  போகணுமா?” - கேள்வி எழுப்பும் குமாரசாமி!

Published on 20/10/2021 | Edited on 20/10/2021

 

KUMARASWAMY

 

கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி. இவர் அண்மைக்காலமாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பைக் கடுமையாக விமர்சித்துவருகிறார். இதனையொட்டி மாநில பாஜக தலைவர் நளின் குமார் கடீல், ஆர்.எஸ்.எஸ். ஷாகாவிற்கு வந்து சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து தெரிந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

 

இதற்கு தற்போது பதிலளித்துள்ள குமாரசாமி, ஆபாச படத்தைப் பார்க்க கற்றுக்கொள்ளத்தான் அங்கு செல்ல வேண்டுமா என கேள்வியெழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர், "அவர்களின் (ஆர்எஸ்எஸ்) தோழமை எனக்கு வேண்டாம். ஆர்.எஸ்.எஸ். ஷாகாவில் கற்பிக்கப்பட்டதை நாம் பார்க்கவில்லையா? சட்டமன்றக் கூட்டத்தொடர் நடக்கும்போது ஆபாச படம் பார்ப்பது போன்றவற்றைத்தானே அங்கு கற்றுத்தருகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். ஷாகாவில் இது அவர்களுக்கு (பாஜகவுக்கு)  போதிக்கப்படவில்லையா? இதைக் கற்றுக்கொள்ள நான் அங்கு செல்ல வேண்டுமா?" என கேள்வியெழுப்பியுள்ளார்.

 

கடந்த 2012ஆம் ஆண்டு மூன்று அமைச்சர்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்போது ஆபாச படம் பார்த்ததாக சர்ச்சை எழுந்தது. அதனை தற்போது குமாரசாமி குறிப்பிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பை விமர்சித்துள்ளார்.