Advertisment

"பெண்களிடம் ஒப்படைக்கலாம் என இருக்கிறேன்"... பிரதமர் மோடியின் திட்டம்...

பெண்களை கௌரவப்படுத்தும் விதமாக வரும் மகளிர் தினத்தன்று தனது சமூகவலைதள பக்கத்திற்கு பெண்களை அட்மினாக செயல்படவைக்க இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Advertisment

modi to assign a woman admin for his twitter page on march 8

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி, "பேஸ்புக் , ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து விலகுவது குறித்து நேற்று யோசித்தேன்" என தெரிவித்தார். சமூக வலைதளங்களில் மிகுந்த ஈடுபாடுடன் இருக்கும் மோடி இவ்வாறு பதிவிட்டது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதேநேரம் பிரதமர் மோடி ட்விட்டரை விட்டு வெளியேறக்கூடாது என வலியுறுத்தி, அவரை பின்பற்றுபவர்கள் #NoModiNoTwitter, #NoSir உள்ளிட்ட ஹாஷ் டேக்களை பயன்படுத்தி ட்வீட் செய்து வந்தனர்.

Advertisment

இந்நிலையில், "வரும் மார்ச் 8 ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, நமது வாழ்விலும், பணியிலும் நமக்கு அதிகளவு ஊக்கமளிக்கும் பெண்களை கௌரவிக்கும் வகையில், எனது ட்விட்டர் கணக்கை அன்றைய தினம் பெண்களிடம் ஒப்படைக்கலாம் என இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe