ஒரே நாளில், ஒரே இடத்தில் மோடி மற்றும் ராகுல் காந்தி... உச்சகட்ட பாதுகாப்பில் கேரளா...

பிரதமராக பதவியேற்ற பின் இன்று கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசுகிறார். அதே நேரம் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அத்தொகுதி மக்களை சந்தித்து நன்றி கூறுகிறார்.

modi and rahul visits kerala

கொச்சி கடற்படை தளத்தில் தரையிறங்கிய மோடி, எர்ணாகுளத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு சென்றார். குருவாயூர் கோவிலில் தரிசனம் செய்த பின்னர் கேரளா முதல்வர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து பேசுகிறார்.

அதே நேரம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை வயநாடு தொகுதியிலேயே தங்கியிருக்கும் ராகுல் காந்தி, அங்கு சுமார் 15 வரவேற்பு கூட்டங்களில் பங்கேற்கிறார். அதன் பின்னர் நாளை பிற்பகல் 2 மணியளவில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கேரளாவில் ஒரே நேரத்தில் சுற்றுப்பயணம் செய்வதால் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Kerala modi Rahul gandhi wayanad
இதையும் படியுங்கள்
Subscribe