Advertisment

"அதிர்ச்சியடைந்தேன்" - மோடி; "காயத்தைத்தான் ஏற்படுத்துகிறது" - ராகுல்!

rahul gandhi - MODI

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலைத்தொடர்ந்து, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசியகட்சிகளுக்கு இடையே வார்தைப்போர் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, மீன்வளத்துறைக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும் எனத் தொடர்ந்து கூறிருகிறார். சமீபத்தில் புதுச்சேரியிலும், பிறகு கேரளாவில் மீனவர்களுக்கிடையே பேசியபோதும் அதனைராகுல்காந்தி தெரிவித்தார்.

Advertisment

இந்தநிலையில் இன்று புதுச்சேரிமாநிலத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, "காங்கிரஸ் தலைவர்கள் இங்குவந்து நாங்கள் மீனவர்களுக்காக ஒரு மீன்வள அமைச்சகம் அமைப்போம் எனக் கூறுகிறார்கள். நான் அதிர்ச்சியடைந்தேன். உண்மை என்னவென்றால், தற்போதைய தேசியஜனநாயகக் கூட்டணிஅரசாங்கம் 2019 ஆம் ஆண்டில் மீன்வளத்துறை அமைச்சகத்தை உருவாக்கியது" எனக் கூறினார்.

Advertisment

இதற்குப் பதிலளித்த ராகுல்காந்தி, "அன்புள்ள பிரதமரே,மீனவர்களுக்கு ஒரு சுதந்திரமான மற்றும் அவர்களுக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்ட மீன்வள அமைச்சகம் தேவை. அமைச்சகத்திற்கு உள்ளிருக்கும் ஒரு துறை மட்டுமல்ல.“Hum do Humare do” (நாம் இருவர், நமக்கு இருவர்)மோசமான காயத்தைதான் ஏற்படுத்துகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

fishing Narendra Modi Rahul gandhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe