Advertisment

மோடி, ராகுல் இல்லாமல் இவர்களுக்கும் பிரதமராகும் வாய்ப்பு?

இந்தியாவில் பல்வேறு கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த பாராளுமன்ற தொகுதிகளிலும் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தொகுதிகளிலும் தொங்கு பாராளுமன்றம் அமைவதற்கு வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது என கருத்துக்கணிப்பில் கூறிவருகின்றனர். எப்படியென்றால் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைய போதுமான சீட் பெறாமல் விட்டாலும், காங்கிரஸ் கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் மத்தியில் யார் ஆட்சி அமைப்பது என்று கேள்வி வரும். அப்போது மாநில கட்சிகள் ஒரு குறிப்பிட்ட அளவு சீட்கள்வெற்றி பெற்றால் அந்தக் கட்சிகள் யாருடன் கூட்டணி வைக்கிறார்களோ அல்லது ஆதரவு தருகிறார்களோ அவர்களே பிரதமராக வாய்ப்பு அதிகமாக உள்ளது .

Advertisment

ragul modi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

மேலும் அந்த மாநில கட்சிகள் ஒரு சில நிபந்தனைகளுடன் ஏதாவது ஒரு முக்கிய கட்சிக்கு ஆதரவு கொடுத்தால் அந்த மாநில கட்சிகளின் தலைவர்களில் ஒருவர் பிரதமராக வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. இந்த நிலையில் உத்திர பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கு தேச கட்சித்தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு ஆகிய மூவருக்கும் பிரதமராக வரக்கூடிய வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். கர்நாடகாவில் நடைபெற்ற மாநில தேர்தலில் பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் தனி பெரும்பான்மை பெறாத போது குமாரசாமி காங்கிரஸ் கட்சியின்ஆதரவில்முதல்வரானது குறிப்படத்தக்கது. இதே மாதிரி சூழ்நிலை மத்தியில் வந்தால் மாநில கட்சியின் தலைவர்களில் ஒருவர்பிரதமராக வாய்ப்பு உள்ளது. இப்பொழுது வரை காங்கிரஸ் கட்சியினரும் ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் என்று வெளிப்படையாகக்கூறவில்லை தேர்தல் முடிந்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் சேர்ந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று கூறிவருகின்றனர்.

state administrators leaders prime minister ragul gandhi modi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe