கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளமும், நிலச்சரிவும்ஏற்பட்டு பல சேதங்கள் அடைந்துள்ளன.
இந்த சேதங்களை பார்வையிட பிரதமர் மோடி இன்று காலை கொச்சி வந்தடைந்தார். கனமழை ஓயாத காரணத்தினால் ஹெலிகாப்டரில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட இருந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தற்போது பிரதமர் மோடியும், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனும் ஆலோசனை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் அந்த ஆலோசனைகூட்டத்தில்மத்திய அமைச்சர் அல்போன்ஸ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.