ADVERTISEMENT

காண்போரை கண்கலங்க வைத்த விஞ்ஞானிகளின் கண்ணீர்...

08:55 AM Sep 07, 2019 | kirubahar@nakk…

சந்திரயான்- 2 திட்டத்தின் முக்கிய நிகழ்வான, 'விக்ரம் லேண்டர்' நிலவின் தென் துருவ பகுதியில் 70 டிகிரி கோணத்தில் மான்ஸினஸ்- சிம்பிலியஸ்- எஸ் இடையே உள்ள பள்ளத்தாக்கில் மெதுவாக தரையிறக்கும் போது 2.1 கி.மீ தொலைவில் இருந்த லேண்டர் தகவல் தொடர்பை இழந்தது. உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த சந்திரயான் 2 தரையிறக்கம் தடைபட்டது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று பெங்களுருவில் இஸ்ரோ விஞ்ஞானிகள் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "அறிவியல் ஆராய்ச்சியில் தோல்வி என்பதே கிடையாது. கடைசி வரை போராடிய நீங்கள் தன்னம்பிக்கையை இழக்காதீர்கள்; எந்த ஒரு பின்னடைவும், நமக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொடுக்கும். நிலவை தொடும் நமது முயற்சி நிச்சயமாக வெற்றியடையும். நாடும், நானும் எப்போதும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உறுதுணையாக இருப்போம். இன்றைய நாளின் அனுபவத்தின் மூலம் நாளை நாம் நிச்சயம் சாதிப்போம்.

விண்வெளியில் இந்தியா தனது பெயரை நிலை நிறுத்தியுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகளால் இந்தியா பெருமை கொள்கிறது. நமது விண்வெளி திட்டத்தில் புதிய உச்சங்கள் இனிமேல்தான் வரவுள்ளன. நாட்டுக்கான உங்களது பங்களிப்பை வார்த்தையால் விவரிக்க முடியாது. பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையுடன் நாம் பயணிப்போம்" என பேசினார். மோடியின் இந்த உரையின் போது பல விஞ்ஞானிகள் உணர்ச்சி பெருக்கால் கண்ணீர் சிந்தியது காண்போரை கண்கலங்க வைத்தது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT