Skip to main content

இந்தியா தாராளமயமாக்கலுக்கு பின் தற்போதுதான் அதீத வளர்ச்சி அடைந்திருக்கிறது - பிரதமர் மோடி

Published on 25/02/2019 | Edited on 25/02/2019

டெல்லியில் நடந்த சர்வதேச தொழில் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, 2014-ம் ஆண்டுக்கு பிறகு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜி.டி.பி. சராசரியாக 7.4 எனவும், பணவீக்கம் 4.5 சதவீதத்திலும் இருக்கிறது. தாராளமயமாக்கல் காலகட்டத்தின் பிறகு இதுதான் அதிகப்படியான வளர்ச்சியும், குறைந்த பணவீக்கம் எனத் தெரிவித்துள்ளார்.  
 

modi

 

மேலும் ஜி.எஸ்.டி. பற்றி பேசிய அவர், சரக்கு மற்றும் சேவை வரி உள்ளிட்ட சீர்திருத்தங்கள், இந்திய உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை அதிகரிப்பதற்கு வழிவகை செய்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்தியாவை ரூ.10 இலட்சம் கோடி பொருளாதார நாடாக மாற்றுவதே தன் இலக்கு என்றும், இது எண்ணிலடங்கா ஸ்டார்ட் அப் தொழில்கள் மூலமாக அடைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்