Advertisment

அப்துல் கலாமிற்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி!

modi

Advertisment

இந்தியாவின் தலை சிறந்த ஆராச்சியாளரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல்கலாம் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இது அவரது 69 -ஆவது பிறந்த நாளாகும். அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பல பிரபலங்கள் நாட்டிற்காக அப்துல்கலாம் ஆற்றிய பங்களிப்பினை நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அப்துல்கலாமிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தேச வளர்ச்சிக்கு விஞ்ஞானியாகவும், முன்னாள் குடியரசுத் தலைவராகவும் அப்துல்கலாம் அளித்த பங்களிப்பை இந்தியா என்றும் மறக்காது. அவரது வாழ்க்கைப் பயணம் லட்சக்கணக்கானவர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.

Abdulkalam modi
இதையும் படியுங்கள்
Subscribe