sdrhg

Advertisment

சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த 5 ரூபாய் டாக்டர் என அழைக்கப்படும் டாக்டர் ஜெயச்சந்திரன் கடந்த வியாழன் அன்று காலமானார். அதனை தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொள்ள அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இந்நிலையில் இவரின் இறப்பிற்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், 'டாக்டர் ஜெயச்சந்திரன் ஒரு ஹீரோ, அவர் தனது வாழ்வை மக்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்துள்ளார்' என கூறினார். சென்னையை சேர்ந்த மருத்துவர் ஜெயச்சந்திரன் கடந்த 44 ஆண்டுகளாக 5 ரூபாயில் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.