kamal

சமூக வலைதளங்களில் தனது பாடலினால் பிரபலமாகி வந்த ராஜேஷ் என்றகேரள இளைஞரை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்தார்.

Advertisment

அண்மையில் சமூக வலைத்தளங்களில் விஸ்வரூபம் படத்தில் வரும் ''உன்னை காணாமல் நான் இங்கு நானில்லையே '' என்ற பாடலை பாடி அசத்தியவர் கேரளாவை சேர்ந்த மரம்வெட்டும் தொழிலாளியானராஜேஷ் என்ற இளைஞர்.

Advertisment

அவரது அந்த வைரல் வீடியோவை பார்த்த பாடகர் சங்கர் மாதவன் அவரை தான் காண விரும்புவதாக டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

அப்படி இருக்க இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அந்த கேரள இளைஞரை இன்றுதனதுஅலுவலகத்தில் சந்தித்து அவரது திறமையை பாராட்டினார்.

Advertisment

அப்போது கமல்ஹாசன் கூறுகையில், இது போன்ற அசாத்திய திறமைகள் நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் கண்டிப்பாக பாராட்டப்படவேண்டும், திறமைகளை வெளிக்கொணர வேண்டும். கேரளாவில் மரம் தூக்கும் ஒரு இளைஞர் முறையாக இசை கற்றுக்கொள்ளவில்லை என்றாலும் உண்மையில் மிகவும்அபூர்வமான திறமையாக இருக்கிறது என கூறினார். மேலும் தனது சினிமாவிலும் கண்டிப்பாக வாய்ப்பு தருவதாகவும் கூறினார்.

அந்த சந்திப்பின் இறுதியில் இளைஞர் ராஜேஷ் மீண்டும்விஸ்வரூபம் படத்தில் வரும் ''உன்னை காணாமல் நான் இங்கு நானில்லையே '' என்ற பாடலை அனைவர் முன்னிலும்பாடி அசத்தினார்.