Advertisment

'எம்.எல்.ஏக்கள் கூண்டோடு விலகல்'-ஆம் ஆத்மியில் அதிர்ச்சி  

'MLAs leaves' - Shock in Aam Aadmi Party

70 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட தலைநகர் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள், இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. இதனால் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க என மும்முனை போட்டி நிலவி வருகிறது.

Advertisment

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்தது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திரிலோக்புரி எம்எல்ஏ ரோஹித், கஸ்தூர்பா நகர் எம்.எல்.ஏ மதன்லால், ஜனக்புரி எம்.எல்.ஏ ராஜேஷ் ரிஷி, பாலம் தொகுதி எம்எல்ஏ பாவ்னா கவுர் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளார். டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராததால் நான்கு எம்எல்ஏக்களும் அதிர்ச்சியில் கட்சியில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது ஆம் ஆத்மி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

Advertisment
elections Delhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe