Skip to main content

ஆந்திர முதல்வருக்கு ரோஜா தந்த ஸ்பெஷல் கிப்ட்!

Published on 14/12/2019 | Edited on 14/12/2019

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெலுங்கானாவை சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் நான்கு நபர்களால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து உயிரோடு எரிக்கப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நநிலையில், பாலியல் குற்றச்சாட்டு உள்ளானவர்கள் விசாரிக்கப்பட்டு, 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்ற வழி செய்யும் சட்டத்தினை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கொண்டு வந்தார். இந்த மசோதாவிற்கு ஆந்திர அமைச்சரவையும் ஒப்பதல் அளித்தது. இதன் மூலம் ஆந்திர மாநிலம் இந்தியாவிற்கே ஒரு முன்மாதிரியான மாநிலம் என்ற பெயரை பெற்றது.
 

gkh



இதனை வரவேற்றுள்ள ஆந்திர மாநில பெண் எம்.எல்.ஏக்கள் நேற்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், இன்று நடிகையும் சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா ஜெகனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், அவருக்கு திலகமிட்டு, ராக்கி கயிறு கட்டி ரோஜா மகிழ்ந்தார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் ரோஜா மீது பண மோசடி புகார்

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
minister roja counciler money laundering issue

ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் இருக்கிறார் நடிகை ரோஜா. இந்த நிலையில் திருப்பதி மாவட்டம் புத்தூர் நகராட்சியின் கவுன்சிலர் புவனேஷ்வரி என்பவர், ரோஜா மீது பண மோசடி புகார் கொடுத்துள்ளார். 

புவனேஷ்வரிக்கு நகர் மன்றத் தலைவர் பதவி வாங்கி தருவதாக ரோஜா கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், ரோஜாவின் உறவினர் குமாரசாமியிடம் ரூ.40 லட்சம் தந்துள்ளதாக புவனேஷ்வரி தெரிவித்துள்ளார். மேலும் முதல் தவணையாக ரூ.20 லட்சம் கொடுத்ததற்கான வீடியோ ஆதாரத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். 

மேலும், இது தொடர்பாக பேசிய அவர், “இரண்டு ஆண்டுகள் கடந்தும், பதவி வழங்கவில்லை. இது தொடர்பாக அமைச்சர் ரோஜாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலையிட்டு சரி செய்ய வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார். 
 

Next Story

விஜயகாந்த் மறைவிற்கு தென்னிந்திய பிரபலங்கள் இரங்கல்

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
south indian cinema celebrities about vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். இதையடுத்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது. 

இந்த நிலையில் தென்னிந்திய பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், “அந்த கம்பீரம், அந்த மனிதநேயம், அந்த நேர்மை, இனி எப்போது காண்போம் கேப்டன், உங்கள் நினைவுக்கும், உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவு இல்லை” என பதிவிட்டுள்ளார். 

நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா, “தமிழ் திரையுலகின் ஜாம்பவான் கேப்டன் விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தமடைந்தேன். பொன் இதயம் கொண்ட மனிதரும், அவரது தெய்வீக ஆத்மாவும் சாந்தியடையட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.