
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் டி.பி.ஆர்.செல்வம். இவருக்கு, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மண்ணாடிப்பட்டு தொகுதியை என்.ஆர்.காங்கிரஸ் தலைமை ஒதுக்காததால் விரக்தியில் உள்ளார். இதுகுறித்து அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு என்ன செய்வது தெரியவில்லை என புலம்பியுள்ளார்.
இந்நிலையில் இன்று (17.03.2021) காலை லாஸ்பேட்டை முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியின் காரை மறித்த செல்வம்ஆதரவாளர்கள்"டி.பி.ஆர். செல்வத்திற்கு சீட் வழங்க வேண்டும்" என வலியுறுத்தி காரை முற்றுகையிட்டு, சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயபால், "தலைவர் சொல் பேச்சைக் கேளுங்கள். நல்லது நடக்கும். அவரது காரை மறித்து மறியல் செய்ய வேண்டாம்" என கேட்டுக்கொண்டார். சிறிது நேரபேச்சுவார்த்தைக்குப் பின்பு அவர்களுக்கு வழிவிட்டனர்.தங்களது தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருக்கு சீட்டு வழங்காததால் கட்சித் தலைவரின் காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Follow Us