Advertisment

”அவர் தொடர்ந்து சாதிப்பதால் இந்தியா பெருமைகொள்கிறது” - முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 

Neeraj Chopra

அமெரிக்காவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது கடந்த 15ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் 88.13 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்த நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன் மூலம், உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக இந்தியாவிற்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. நீரஜ் சோப்ராவிற்கு நாடு முழுவதுமிருந்து பாராட்டுகள் குவிந்துவரும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் நீரஜ் சோப்ராவிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், ”நீரஜ் சோப்ரா மீண்டும் ஒருமுறை வரலாறு படைத்திருக்கிறார். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் ஆண் வீரர் மற்றும் இரண்டாவதாக பதக்கம் வென்ற இந்தியர் ஆகிய பெருமைகளைப் பெற்றதற்காக வாழ்த்துகள். பெரிய மேடைகளில் அவர் தொடர்ந்து சாதித்துவருவதால் இந்தியா பெருமைகொள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe