Skip to main content

கோழிக்குஞ்சு மற்றும் 10 ரூபாயுடன் சிறுவன்!!! குவியும் பாராட்டுகள்...

Published on 04/04/2019 | Edited on 04/04/2019

மிசோரம் சிறுவன் ஒரு கோழிக்குஞ்சோடும், பத்து ரூபாயுடனும் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதுகுறித்து இருக்கும் அந்த பதிவில் மிசோரம், சாய்ராங் பகுதியைச் சேர்ந்த சிறுவன், தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டு கோழிக்குஞ்சு குறுக்கே வந்துள்ளது, அதனை கவனிக்காத அந்த சிறுவன் சைக்கிளால் கோழிக்குஞ்சு மீது மோதிவிட்டான்.

 

அடிபட்ட கோழிக்குஞ்சை பார்த்து பதறிப்போன அந்த சிறுவன், உடனடியாக அதை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடியுள்ளான். தனது கையில் இருந்த சில 10 ரூபாய் நோட்டையும் எடுத்துச்சென்றுள்ளான், அந்தக் கோழிக்குஞ்சின் சிகிச்சைக்காக, மேலும் இதைவைத்துக்கொண்டு அந்த கோழிக்குஞ்சிற்கு சிகிச்சை அளியுங்கள் எனவும் கூறியுள்ளான். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 

ஆனால் ஏற்கனவே அந்த கோழிக்குஞ்சு இறந்துவிட்டது இதை அந்த சிறுவனின் பெற்றோர் அவனிடம் கூறியுள்ளனர். மேலும், “அவன் இப்படி செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை. மற்றவர்களை விட தனித்துவமாக இருக்கிறான்” என்று சிறுவனின் தந்தை கூறியுள்ளார்.
 

அந்த சிறுவனின் இரக்க குணத்தை பல்வேறு மக்களும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் கூறிவருகின்றனர். அந்த பதிவை பதிவிட்டார், கடைசியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், இதைப் பார்க்கும்போது ஒரே நேரத்தில் சிரிப்பும், அழுகையும் வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மிதக்கும் வடகிழக்கு மாநிலங்கள்; மீட்புப்பணிகள் தீவிரம்!

Published on 30/05/2024 | Edited on 30/05/2024
Floating Northeast States; Intensive rescue work

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ரிமால் எனப் பெயரிடப்பட்டது. இது வங்காள தேசம் மற்றும் அதையொட்டிய மேற்குவங்க மாநில கடற்கரை இடையே கடந்த 26 ஆம் தேதி (26.05.2024) நள்ளிரவில் கரையைக் கடந்தது. இதன் காரணமாக வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் மிசோரம் போன்ற மாநிலங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலைகள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன. மேம்பாலங்கள் உடைந்தன. விளைநிலங்கள் வெள்ளத்தில் மிதந்தன.

இதனையடுத்து ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மழை வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களைப் பத்திரமாக வெளியேற்றுவதற்கும், உதவி பொருட்களைக் கொண்டு செல்வதற்கும் தற்காலிக சாலைகள், பாலங்கள் அமைத்து வருகின்றனர். அந்த வகையில் மணிப்பூர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் ரிமால் புயலின் போது பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் போன்ற சூழ்நிலையில் ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் விரிவான நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

Floating Northeast States; Intensive rescue work

இந்த மழை வெள்ள பாதிப்பு குறித்து ராணுவ அதிகாரி அதிகாரிகள் கூறுகையில், ‘மணிப்பூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இன்று (30.05.2024) வரை 1500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் 800 குழந்தைகள் உட்பட மொத்தம் 4000க்கும் மேற்பட்ட நபர்களை மீட்புப் படையினர் வெற்றிகரமாக மீட்டுள்ளனர். மீட்புப் பணிகளின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக உணவுப் பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டன. அவசர மற்றும் அத்தியாவசியத் தேவையை நிவர்த்தி செய்ய ஏராளமான வீடுகளுக்குச் சுத்தமான குடிநீரும் வழங்கப்பட்டது” எனத் தெரிவித்தனர். 

Next Story

கல் குவாரி சரிந்து விபத்து; 21 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/05/2024 | Edited on 28/05/2024
stone quarry collapse near Aizawl in Mizoram

ரீமால் புயல் காரணமாக மிசோரம் மாநிலம் ஐஸ்வால் மாவட்டத்தில் கனமழை பொழிந்தது. இதனால் அங்குள்ள கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்த்தில் முதற்கட்டமாக 17 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும் இடிபாடுகளில் சிக்கிய 6 பேரை மீட்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. கனமழை காரணமாக கல்குவாரி சரிந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் மழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மிசோரம் மாநிலம் ஐஸ்வால் அருகே கல் குவாரி இடிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன் உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் வெற்றியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.