Advertisment

ஒரு கிலோ மாம்பழம் ரூ 2.75 லட்சமா!

miyazaki mango per kilo 2 lakh 75 thousand rupees

Advertisment

மேற்கு வங்க மாநிலத்தின்பல்வேறு பகுதிகளில்மாம்பழங்கள் விளைவிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து சிலிகுரியில் மாம்பழ கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு வங்கத்தின் ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த 55 விவசாயிகள் மாம்பழ திருவிழாவில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தங்களது தோட்டத்தில் விளைந்த மாம்பழங்களை மக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர்.

இந்த கண்காட்சியில் அல்போன்சா, லாங்க்ரா, அம்ரபாலி, சூர்யாபுரி, ராணி பசந்த், லக்ஷ்மன் போக், ஃபஜ்லி, பிரா, சிந்து, ஹிம்சாகர், கோஹிதூர் மற்றும் பிற வகைகள் மாம்பழங்கள்என 262க்கும் மேற்பட்ட வகையான மாம்பழங்கள்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் உலகின் விலை உயர்ந்த மாம்பழமானமியாசாகி கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது மக்களை வெகுவாக கவர்ந்துவருகிறது.

இந்த மாம்பழம்சர்வதேசசந்தையில் கிலோ 2 லட்சத்து75 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த கண்காட்சிக்கு வரும் பொதுமக்கள் மியாசாகி மாம்பழங்களை ஆச்சரியத்துடன்பார்த்து செல்கின்றனர். சமீபத்தில் மேற்கு வங்க முதல்வர்மம்தா பானர்ஜி, பிரதமர்மோடி, குடியரசுதலைவர் திரௌபதிமுர்மு மற்றும் உச்ச நீதிமன்றநீதிபதி சந்திரசூட் ஆகியோருக்குமேற்கு வங்கமாநிலத்தில் விளைந்த மாம்பழங்களை அனுப்பி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIRAL Farmers mango
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe