Advertisment

உயிரிழந்தவரின் கண்கள் மாயம்; அரசு மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

the missing eyes of the deceased at bihar government hospital

பீகார் மாநிலம், பாட்னா பகுதியைச் சேர்ந்தவர் பண்டூஷ். கடந்த 14ஆம் தேதி பாட்னாவில் நடந்த ஒரு குறிப்பிட்ட மோதலின் போது பண்டூஷை, மர்மநபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டனர். இதில், படுகாயமடைந்த பண்டூஷ், மீட்கப்பட்டு அங்குள்ள நாளந்தா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வந்த பண்டூஷ், அடுத்த நாள் 15ஆம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisment

இதனையடுத்து, அவரது உடல் நேற்று காலை பிரேத பரிசோதனை செய்ய பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சென்று பார்த்த போது, பண்டூஷின் கண்கள் இல்லாததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

Advertisment

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், தடவியியல் நிபுணர்களை கொண்டு சோதனை செய்தனர். அப்போது, பண்டூஷ் உடல் இருந்த படுக்கை அருகே அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்தி ஒன்று இருந்துள்ளதை கண்டுபிடித்தனர். மேலும், பண்டூஷின் கண்களின் மீது ஒரு எலி இருந்ததாகவும், அந்த எலி தான் அவரது கண்களை தின்றதாக மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பண்டூஷின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இறந்து போன பண்டூஷின் கண்களை யாராவது தோண்டி எடுத்தார்களா? அல்லது எலி தின்றதா? என்ற பல கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Investigation patna Bihar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe