மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இன்று குஜராத்தில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கே.டி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சில சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவரது கழுத்து பகுதியில் இருந்த சிறிய கட்டி ஒன்று அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர் தற்போது நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காலை 9 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய கழுத்தின் பின்புறத்தில் இருந்த லிப்போமா என்ற கொழுப்புக் கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இது ஒரு சிறிய அறுவை சிகிச்சை என்பதால் அது முடிந்தவுடன் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.