Advertisment

‘வீடியோவை வெளியிடுவோம்’ - சிறுமியை மிரட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை

Girl threatened and misbehaviour in karnataka

கர்நாடகா மாநிலம், துமகூரு மாவட்டத்தில் சித்தகங்க மடத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவைக்காண சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து கொள்வர். அந்த வகையில், இந்த மடத்தில் கடந்த 4 ஆம் தேதி திருவிழா நடைபெற்றுள்ளது.

Advertisment

இந்த விழாவுக்கு, 18 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவர் தன்னுடைய நண்பருடன் பங்கேற்க சென்றுள்ளார். அதன் பின்னர், அருகே உள்ள மலை உச்சிக்குத்தனது நண்பருடன் சென்று அமர்ந்து பேசியபடி இருந்துள்ளார். இதனை கவனித்த அங்கிருந்த 3 பேர், அவர்கள் இருவரும் அமர்ந்து பேசியதை தூரமாக நின்று தங்கள் செல்போன் மூலம் வீடியோவாக எடுத்துள்ளனர்.

Advertisment

அதன் பிறகு, அந்த 3 பேரும் அவர்களிடம் சென்று மிரட்டியுள்ளனர். மேலும், இந்த வீடியோவை பொதுவெளியில் வெளியிடுவோம் என்று கூறி அந்த சிறுமியை அச்சுறுத்தியுள்ளனர். இதனால், அவர்கள் இருவரும் செய்வதறியாது பயந்து போயுள்ளனர். இதனைப் பயன்படுத்தி, அந்த சிறுமியை மட்டும் பந்திபாளைய பகுதிக்குத்தனியாக இழுத்துச் சென்ற 3 பேரும், அங்கு வைத்து சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்துஅந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகள் 3 பேரையும் தீவிரமாகத்தேடி வந்தனர். இதனையடுத்து, அவர்கள் இருப்பிடத்தை தெரிந்து கொண்ட போலீசார், 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

incident karnataka
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe