Advertisment

சிறுமியை மானபங்கப் படுத்திய 8 இளைஞர்கள்! - வைரல் வீடியோவால் பரபரப்பு

நாடு முழுவதும் சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சட்டத்தை கடுமையாக்கி கெடுபிடிகளை விதித்தாலும், இந்தக் குற்றங்கள் குறைவதாகத் தெரியவில்லை.

Advertisment

Bihar

அந்தவகையில், பீகார் மாநிலத்தில் சிறுமி ஒருவரை எட்டு இளைஞர்கள் சூழ்ந்துகொண்டு பாலியல் ரீதியில் துன்புறுத்தும் வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானது. பதின்ம வயதிருக்கும் அந்த சிறுமியை ஒரு இளைஞன் கெட்டியாக பிடித்துக்கொள்ள, மற்ற இளைஞர்கள் தவறாக தீண்டியும், அங்குமிங்கும் இழுத்தும், அவரது உடைகளைக் களைந்தும் மானபங்கப் படுத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இந்த வீடியோவை சைபர் கிரைம் தடுப்பு போலீஸார் சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கியிருந்தாலும், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் என்று சொல்லப்படும் வாட்ஸ்அப் உள்ளிட்டவற்றின் மூலம் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ என்று, யாரால் எடுக்கப்பட்டது என்ற விவரங்களும், பாதிக்கப்பட்ட சிறுமி, தவறிழைத்த இளைஞர்கள் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

Advertisment

ஆனால், சம்மந்தப்பட்ட வீடியோ காட்சியில் கீழே கிடக்கும் இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து, சம்பவம் நடந்தது பீகார் மாநிலம் ஜெகன்னாபாத் பகுதி என்பது உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக அந்தப் பகுதியின் காவல்துறை கண்காணிப்பாளர் முனீஷ் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. வீடியோ காட்சியில் வரும் இளைஞர்களின் முகத்தை சாட்சியமாக வைத்து காவல்துறை விசாரணை நடத்திவருகின்றனர்.

Molestation Child abuse
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe