Advertisment

வெளிநாடு செல்வதில் இந்திய மாணவர்களுக்கு சிக்கல் -  தீர்க்க எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து வெளியுறவுத்துறை விளக்கம்!

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் படித்து வந்த மாணவர்கள், கரோனாபரவல் காரணமாக இந்தியா திரும்பியுள்ளனர். மேலும் இந்தியாவிலுள்ளபல மாணவர்கள் வெளிநாடு பல்கலைகழகங்களில்சேர்ந்துள்ளனர். இருப்பினும் பல்வேறு பல்வேறு நாடுகளில் உள்ள பயணக்கட்டுப்பாடுகளால், மாணவர்கள் தாங்கள் படிக்கும் நாடுகளுக்கு செல்வதில்சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisment

இந்தநிலையில்இந்த விவகாரம் குறித்த கேள்விக்கு மாநிலங்களவையில் பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர்முரளிதரன், பயணக்கட்டுப்பாடுகளை தளத்துவதற்கான முயற்சிகளை வெளியுறவுத்துறை அமைச்சகம் எடுத்து வருவதாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வெளியுறவுத்துறை இணையமைச்சர்முரளிதரன் கூறியுள்ளதாவது: வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ளஇந்திய மாணவர்கள், அந்தந்த நாடுகளுக்கு செல்வதை சாத்தியமாகும் வகையில், அந்த நாடுகளில் உள்ள பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்த அமைச்சகம் முயற்சி எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் உள்ள நமது தூதரகங்கள், இந்த விவகாரத்தை அந்தந்த நாடுகளில் உள்ள அரசாங்கங்களிடம்எடுத்து சென்றுள்ளன.

பயணக்கட்டுப்பாடுவிவகாரம், சில நாடுகளிடம்அமைச்சக மட்டத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதன்விளைவாக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அயர்லாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், லக்சம்பர்க், ஜார்ஜியா உள்ளிட்ட பல நாடுககள், இந்திய மாணவர்களுக்கான பயணக்கட்டுப்பாடுகளைதளர்த்தியுள்ளன. கரோனாநிலை மேம்படும்போது, மேலும் பல நாடுகள் பயணக்கட்டுப்பாடுகளைதளர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறுவெளியுறவுத்துறை இணையமைச்சர்முரளிதரன் கூறியுள்ளார்.

corona virus ministry of external affairs
இதையும் படியுங்கள்
Subscribe