Skip to main content

சைனிக் பள்ளிகளில் பெண் குழந்தைகளை சேர்க்க ஒப்புதல்!

Published on 18/10/2019 | Edited on 18/10/2019

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் இயங்கி வரும் சைனிக் பள்ளியில் 2021- 2022 ஆம் ஆண்டு கல்வியாண்டு முதல் பெண் குழந்தைகள் சேர்க்க மத்திய அரசு ஒப்புதல். இதற்கான ஒப்புதலை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்துள்ளார்.

MINISTRY OF DEFENCE SAINIK SCHOOLS GIRLS ADMISSION ALLOWED UNION GOVERNMENT DECISION


இரண்டு ஆண்டுகளுக்கு முன் மிசோரம் மாநிலத்தில் உள்ள சைனிக் பள்ளியில் பெண் குழந்தைகளை சேர்க்கும் திட்டம் வெற்றி பெற்றதால், இந்த திட்டத்தை மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தப்படவுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு கல்வியியல் கல்லூரிகளில் சேர்க்கை அறிவிப்பு

Published on 22/09/2023 | Edited on 22/09/2023

 

Admission Notification in Government Colleges of Education
கோப்புப்படம்

 

தமிழகத்தில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் பட்டப்படிப்பு (M.Ed) முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 25 ஆம் தேதி (25.09.2023) இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவு துவங்கும். மேலும் இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள் செப்டம்பர் 30 (30.09.2023) ஆகும். விண்ணப்பம் பதிவு செய்ய ஒவ்வொரு கல்லூரிக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ. 58 மற்றும் விண்ணப்ப பதிவுக் கட்டணம் ரூ. 2 என மொத்தம் ரூ. 60 செலுத்தப்பட வேண்டும். பட்டியல் மற்றும் பழங்குடியின வகுப்பு விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப பதிவுக் கட்டணம் ரூ. 2 மட்டும் செலுத்தினால் போதுமானது. மாணாக்கர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளைத் தேர்வு செய்தல் வேண்டும்.

 

இது தொடர்பான கூடுதல் விவரங்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள்  இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம். இணையதளம் வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் The Director, Directorate of Collegiate Education, Chennai - 15 என்ற பெயரில் 25.09.2023 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாகவும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். மாணவர்கள் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம். மேலும் 9363462070, 9363462007, 9363462042, 9363462024 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனக் கல்லூரி கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

75வது குடியரசு தின விழா; மத்திய அரசின் புதிய முன்னெடுப்பு

Published on 08/05/2023 | Edited on 08/05/2023

 

upcoming republic day parade women participate only 

 

ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் (ஜனவரி 25) மாலை நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ஆற்றும் உரையுடன் குடியரசு தின விழாவானது தொடங்கும். அதனை தொடர்ந்து ஜனவரி 26 ஆம் நாள் காலை குடியரசுத் தலைவர் டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவார்.

 

இவ்விழாவின் ஒரு பகுதியாக நாட்டின் பன்முகக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்திகள், முப்படைகளின் வாகன அணிவகுப்பு, விமானப்படையின் சாகசங்கள் மற்றும் ராணுவ பலத்தை பறைசாற்றும் பாதுகாப்பு வீரர்கள் அணிவகுப்புகள் ஆகியவை நடைபெறும். இதில் பிரதமர், அமைச்சர்கள், அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்வர். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவிற்கு வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவதும் வழக்கமாக உள்ளது.

 

இந்நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி இந்தியாவின் 75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் இந்தியாவின் இந்த குடியரசு தினமானது வைர விழாவாகக் கொண்டாடப்படும் வேளையில் இந்த விழாவில் இடம்பெறும் அணிவகுப்பு முழுவதும் பெண்களைக் கொண்டே நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சக பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வரும் குடியரசு தின அணிவகுப்பு, ராணுவ இசைக்குழு, அலங்கார ஊர்தி அணிவகுப்பு என அனைத்து நிகழ்வுகளும் பெண் அதிகாரிகள் தலைமையில் முழுக்க முழுக்க பெண்களைக் கொண்டே நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது குறித்து விவாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

 

மேலும், 2024 ஆம் ஆண்டிற்கான குடியரசு தின விழா அணிவகுப்பு திட்டமிடல் தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் முப்படைகளுக்கும் பல்வேறு துறை அமைச்சகங்களுக்கும் கடந்த மார்ச் மாதம் அனுப்பிய கடிதத்தில் குடியரசு தின அணிவகுப்பு முழுவதும் பெண்களைக் கொண்டே நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.