
மத்திய அமைச்சர் மகனின்கார்மோதிஇரண்டுவிவசாயிகள் உயிரிழந்ததாக வெளியான தகவல்உத்தர பிரதேசத்தில்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேளாண்சட்டங்களுக்கு எதிராகஉத்திர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் என்பது நீண்டநாட்களாகத்தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் இந்த போராட்டத்தில் இன்றைய தினம் உத்தரப் பிரதேச மாநிலம்லக்கிம்பூரில்விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில்லக்கிம்பூர்பகுதியில், உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வரும் மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சருமானஅஜய்மிஸ்ராவின்மகன் அரசு விழாவில்பங்கேற்கச்சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி மத்திய இணை அமைச்சர் மகனின் காரை முற்றுகையிட முயன்றுள்ளனர். அப்பொழுது அமைச்சரின் மகன் வந்த வாகனம் மோதி ஏராளமானவிவசாயிகள்காயமடைந்தனர். இந்த விபத்தில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்ததாகவும், 8 விவசாயிகள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்சேர்க்கப்பட்டுள்ளனர்என 'சம்யுக்தா கிஷான்மோர்ச்சா'என்றஅமைப்பு அதன்அதிகாரப்பூர்வட்விட்டர்பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த சம்பவத்தில், ஆத்திரத்தில் மத்திய இணை அமைச்சர் மகனின் காரை விவசாயிகள் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் தற்போது அசாதாரண சூழல் நிலவி வருகிறது.பாதுகாப்பிற்காகபோலீசார்குவிக்கப்பட்டுள்ளனர்.
Follow Us