Advertisment

"எனது அமைச்சர்களுக்கு இந்தி தெரியாது" - அமித்ஷாவிற்குக் கடிதம் எழுதிய மிசோரம் முதல்வர்!

MIZORAM CM

மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. அக்கட்சியின் தலைவர் ஜோரம்தாங்கா முதல்வராக இருந்து வருகிறார். இந்தசூழலில் சமீபத்தில் மிசோரம் மாநிலத்தின் தலைமை செயலாளராகஇருந்த அதிகாரியின் பதவிக்காலம் முடிவடைந்தது.

Advertisment

இதனையடுத்துமுதல்வர் ஜோரம்தாங்கா,கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ஜே.சி.ராம்தங்காஎன்பவரைபுதிய தலைமை செயலாளராகநியமிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்தார். ஆனால் மத்திய உள்துறை அமைச்சகமோரேணு சர்மா என்பவரைபுதிய தலைமை செயலாளராக நியமித்து, அவர் வரும் நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்தஅப்பொறுப்பினைவகிப்பார் என அக்டோபர் 28 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. அதேநேரத்தில்அதே அக்டோபர் 28 ஆம் தேதி ராம்தங்காநவம்பர் ஒன்று முதல் தலைமை செயலாளராகபொறுப்பேற்பார்என மிசோரம் அரசு உத்தரவு பிறப்பித்தது.

Advertisment

இதனால் தற்போது மிசோரத்தில் இரண்டு தலைமை செயலாளர்கள் பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ரேணு சர்மாவுக்கு மிசோ மொழியறிவு இல்லை என்பதால் அவரை மாற்ற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முதல்வர் ஜோரம்தாங்கா கடிதம் எழுதியுள்ளார்.

ஜோரம்தாங்கா அமித்ஷாவிற்குஎழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: பெரும்பலான மிசோ மக்களுக்கு இந்தி புரியாது.என்னுடைய கேபினட் அமைச்சர்கள் யாருக்கும் இந்தி புரியாது. அவர்களில் சிலருக்கு ஆங்கில மொழியிலேயே பிரச்சனைகள் உள்ளன. இத்தகைய பின்னணியில், மிசோ மொழியறிவு இல்லாத நபர் ஒரு போதும் திறமையான, செயல்திறன் மிக்க தலைமைச் செயலாளராக இருக்க மாட்டார்.

இந்த உண்மையின் காரணமாக, மிசோரம் மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து மிசோ மொழியறிவு இல்லாத ஒருவரை இந்திய அரசு ஒருபோதும் தலைமைச் செயலாளராக நியமித்தில்லை. அது காங்கிரஸ் கூட்டணி அரசாக இருந்தாலும் சரி, பாஜக கூட்டணி அரசாக இருந்தாலும் சரி. மிசோரம் மாநிலம் உருவானதில் இருந்தேஇதேநடைமுறைதான் உள்ளது .இந்தியாவின் பிற மாநிலங்களிலும், அந்தந்த மாநிலத்தின் அடிப்படை மொழி தெரியாத நபர் தலைமை செயலாளராகநியமிக்கப்படுவதில்லை.

வடகிழக்கு மாநிலங்களில் நான் மட்டும்தான், ஆரம்பம் முதல் இன்றுவரை பாஜக கூட்டணிக்கு விசுவாசமானதோழனாக இருந்து வருகிறேன். எனவே பாஜக கூட்டணியுடனான இந்த விசுவாசமான நட்புக்காக நான் ஒரு சிறப்பு அனுகூலத்திற்கும் பரிசீலனைக்கும் தகுதியானவன் என்று நம்புகிறேன். ஒருவேலை தலைமை செயலாளர் குறித்த எனது முன்மொழிவு மறுக்கப்பட்டால் காங்கிரஸ் கட்சியும் மற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உண்மையாகச் சேவை செய்ததற்காக என்னை கேலி செய்யும். எனவே, இந்த உத்தரவை மாற்றியமைத்து, எனது முன்மொழிவை தயவுகூர்ந்து ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ஜோரம்தாங்கா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Amit shah hindi chief minister mizoram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe