Advertisment

மீ டூ விவகாரம்... ராஜ்நாத் சிங் தலைமையில் அமைச்சரவை கூட்டம்...

met

மீடூ விவகாரம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து அரசு சார்பில் உயர் மட்ட அமைச்சரவை கூட்டம் வரும் 10 ஆம் தேதி கூட உள்ளது. இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் கூறும்போது, இந்த அமைச்சரவைக் குழுவானது உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி ஆகியோர் தலைமையில் இயங்கும் என்று தெரிவித்தது. பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் பெண்களைப் பாதுகாக்கவும், அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் வழிமுறைகளை ஆராய இந்த குழுவுக்கு 3 மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Rajnath singh cabinet metoo
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe