Published on 21/08/2018 | Edited on 21/08/2018

கர்நாடக மாநிலம் இராமநாதபுரா என்ற இடத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க சென்ற கர்நாடக முதல்வர் குமாரசாமியின் சகோதரரும் கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சருமான ரேவண்ணா அங்கு அவருக்கு அருகில் கூடியிருந்த மக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கும்பொழுது கையில் கொடுக்காமல் மக்களை நோக்கி வீசி எறிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது அதற்கான விடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் விமர்சனத்தை பெற்றுவருகிறது.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி, அங்கு மக்கள் கூட்ட நெரிசலால்தான் அவர் உணவு பொட்டலத்தை தூக்கி எறியும் நிலை ஏற்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.