திமுக தலைவர் கலைஞர் உடல்நிலை நலிவடைந்து காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பல தலைவர்கள் அவரது உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இன்றுதற்போதுமத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கலைஞர் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்தார். மேலும் அவருடன்தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் மருத்துவமனைக்கு வந்திருந்தார். மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு திமுக செயல்தலைவர் ஸ்டாலினை சந்தித்து கலைஞர் உடல்நலம் குறித்து விசாரித்த பின் செய்தியாளர்களை சந்தித்தார்