''பென்ஷன் தான் வாங்கித்தர முடியும்... திருமணமா செய்து வைக்க முடியும்?''- வைரலாகும் ரோஜாவின் வீடியோ! 

Minister roja viral video

'அரசின் சார்பில் முதியோர் உதவித்தொகைதான் பெற்றுத்தரமுடியும், திருமணமா செய்து வைக்க முடியும்?' என முதியவர் ஒருவரிடம் ஆந்திர அமைச்சர் நடிகை ரோஜா பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் இடம்பிடித்தார் நடிகை ரோஜா. இவருக்கு சுற்றுலா துறை ஒதுக்கப்பட்ட நிலையில் அரசியலில் மேலும் தீவிரம் காட்டி வருகிறார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பாக எம்.எல்ஏக்கள் அனைவரும் அவரவர் தொகுதியில் உள்ள மக்களை நேரில் சந்தித்து 'வாசலுக்கு வாசல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்' எனும் நிகழ்ச்சியை நடத்தி மக்களின் குறைகளை கேட்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி. அதன்படி தனது சொந்த தொகுதியான நகரிக்கு சென்ற அமைச்சர் ரோஜா அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்பொழுது முதியவர் ஒருவர், இந்த வயதில் தன்னை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை என கோரிக்கை வைக்க அதற்கு ரோஜாவோ ''அரசு சார்பில் முதியோர் ஓய்வூதியம்தான் பெற்றுத்தர முடியும் திருமணமா செய்து வைக்க முடியும்'' என நகைச்சுவையாக பதிலளித்தார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி அதிகம் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Andrahpradesh
இதையும் படியுங்கள்
Subscribe