Advertisment

பிரச்சார வாகனத்தில் இருந்து கீழே விழுந்த அமைச்சர்; வீடியோ வெளியாகி அதிர்ச்சி

Minister falls from campaign vehicle Shocked when the video was released

தேர்தல் பிரச்சாரத்தின் போது வாகனத்தில் இருந்து தெலங்கானா அமைச்சர்விழுந்த வீடியோ காட்சிகள் வெளியாகி மக்க்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

119 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். இதனையடுத்து அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் ஆர்மூரில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மகனும், அம்மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான கே.டி.ராமாராவ் பலருடன் வாகன பேரணி சென்று கொண்டிருந்தார்.

Advertisment

அப்போது டிரைவர் திடீரென பிரேக் பிடித்ததால் வாகனத்தின் மேல் இருந்த தடுப்பு கிரில் உடைந்தது. இதனால் வாகனத்தின் மேலே இருந்தபடி பிரச்சாரம் செய்த அமைச்சர் கே.டி.ராமாராவ் மற்றும் அவருடன் நின்றிருந்தவர்கள் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் அமைச்சர் கே.டி.ராமாராவ், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் ரெட்டி, சட்டமன்ற உறுப்பினர் ஜீவன் ரெட்டி ஆகியோர் கீழே விழுந்ததில் காயமடைந்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

minister telangana
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe